கவிஞன்

தன்னை மறந்து உயரப் பறந்து..

விண்ணை நினைந்து மண்ணை அடைவான்.

பேனா எடுத்தால் ஞானி என்ற இறுமாப்பு!

திடீரென எழுதுகோல் எரிமலையாய் வெடிக்கும்..

அடுத்த நிமிடம் குழந்தையின் அழகு பாடும்.

இலக்கணங்களை உருவாக்கிப் பின் அவனே உடைப்பான்..

இவனுக்கு வருமானம் பெரிதாய்க் கிடையாது..

மொழியை மணந்தவனுக்கு வருமானம் பெரிதும் கிடையாது!

ஒவ்வொரு மொழியும் முதலில் தழுவுவது இவனை..

அக்காதலுக்காக எதையும் செய்யத் துணிந்தவனும் இவனே!

அம்மொழி இவனுக்களித்த மிகப்பெரும் பரிசுதானென்ன?

‘கவிஞன்’ என்ற அந்த ஒற்றைச்சொல் தான்!​

1 thought on “கவிஞன்

  1. Congratulations, Annamalai! I know you write poems as well, but not this well. Pregnant with meaning. A portrait of reality! All the Best? Great Start!!

    Like

Leave a comment